சென்னை: “அதிமுக - பாஜக கூட்டணி திமுக அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல; இரு முறை! 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக்கால நிகழ்வுகள் உள்ளன.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பாஜக - அதிமுக கூட்டணி, திமுகவின் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, இந்தித் திணிப்புகள் கொள்கைகள், தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் எனப் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.