பாஜ புதிய தலைவர் பிப்ரவரியில் தேர்வு

2 months ago 13

புதுடெல்லி: பாஜ கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்றாலும், 2024 மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மக்களவை தேர்தல் முடிவடைந்ததும், கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடைமுறைகள் தொடங்கப்பட்டது. பாஜ மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘மாநில தலைவர்களில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. பிப்ரவரி இறுதிக்குள் புதிய பாஜ தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்பார். புதிய தலைவர் யார் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’’ என்றார்.

The post பாஜ புதிய தலைவர் பிப்ரவரியில் தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article