பாஜ கூட்டணியில் அதிமுக இணையுமா? நாளை சாவதற்கு இன்றே போய் சுடுகாட்டில் படுக்க முடியுமா? மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ ‘லக லக’

2 hours ago 2

சோழவந்தான்: பாஜ கூட்டணியில் அதிமுக இணையுமா என்ற கேள்விக்கு, ‘நாளை சாவதற்காக இன்றே போய் சுடுகாட்டில் படுக்க முடியுமா’ என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட துவரிமான் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொகுதி எம்எல்ஏவும், அதிமுக மாஜி அமைச்சருமான செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டை ஆளும்கட்சி என்றால் அது திமுகவும், அதிமுகவும் தான்.

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும், ராஜ்யசபா குறித்தும் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடிதான் முடிவு எடுப்பார். அதுதொடர்பாக உங்களிடம் விளக்கமாக கூறிவிட்டார். கூட்டணி எப்படி அமையும்? எப்படி நாங்க கூட்டணி அமைக்கப் ேபாறோம் என்பதை தெரிந்து கொள்ள 6 மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

6 மாதம் பொறுங்க. பொறுத்தப் பிறகு கேளுங்க’’ என்றார். ‘‘பாஜ கூட்டணியில் அதிமுக இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதா’’ என்ற கேள்விக்கு, ‘‘இப்படி இருக்குமோ… அப்படி இருக்குமோ என நினைத்து கற்பனை நாயகனா மாறாதீங்க. அதனால் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. நாளை சாவதற்கு இன்றே போய் சுடுகாட்டில் படுக்க முடியுமா? என்னைக்கோ நடக்கப்போறத ஏன் இன்னைக்கே கற்பனைக்கு வரணும்.’’ என்றார்.

* எம்பியாக்குனது அதிமுக ஜெயிச்சதும் தாவிட்டார்: அன்புமணி மீது ‘அட்டாக்’
ராஜ்யசபா சீட் குறித்து செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, ‘‘ராஜ்யசபா சீட்டு குறித்து எங்க பொதுச் செயலாளர் ஏற்கனவே பேசி இருக்கார். ஜெயலலிதா, எம்ஜிஆர் எப்படியோ, அது மாதிரி யாருக்கு என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதை எடப்பாடி நிறைவேற்றுவார். இதற்கு உதாரணம் பாமக. உங்களுக்கு தெரியும்… அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினரா இருக்கார்னா, அதுக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், ஜெயித்த மறு நிமிஷம் அதற்கு காரணமான எங்கள் பொதுச்செயலாளரை எல்லாம் மறந்துவிட்டு, அன்புமணி ஒன்றிய ஆளுங்கட்சிக்கு தாவிட்டார். இருந்தாலும், வாக்குறுதி கொடுத்தது, கொடுத்தது தான் என எடப்பாடி சொன்னார். அதனால நீங்க அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. தோழமை கட்சிகளை எல்லாம் எப்படி அரவணைத்து போகனும்னு எடப்பாடிக்கு தெரியும்’’ என்றார்.

The post பாஜ கூட்டணியில் அதிமுக இணையுமா? நாளை சாவதற்கு இன்றே போய் சுடுகாட்டில் படுக்க முடியுமா? மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ ‘லக லக’ appeared first on Dinakaran.

Read Entire Article