பாஜ இரட்டை என்ஜின் அல்ல இரட்டை தவறு அரசு: அகிலேஷ் யாதவ் விமர்சனம்

3 weeks ago 6

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வருவது இரட்டை என்ஜின் அல்ல இரட்டை தவறு அரசாகும் என்று பாஜவை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள திவா ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக சிஎஸ்எம்டி-மட்கான் வந்தே பாரத் ரயில் நேற்று முன்தினம் வழக்கமான வழித்தடத்தில் இருந்து விலகி கோவா செல்லும் தடத்தில் சென்றுவிட்டது. இதனால் சுமார் 90 நிமிடங்கள் தாமதமானது.

இந்நிலையில் இதனை விமர்சித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘வந்தே பாரத் தனது வழியை தொலைத்துவிட்டது? கோவா செல்ல வேண்டிய ரயில் கல்யானின் முடிந்துவிட்டது. பாஜ இரட்டை என்ஜின் அரசு அல்ல இரட்டை தவறு அரசாகும். பாஜ நாட்டின் இயந்திரத்தை தவறான பாதையில் தடம் புரள செய்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜ இரட்டை என்ஜின் அல்ல இரட்டை தவறு அரசு: அகிலேஷ் யாதவ் விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article