பாஜ அரசுகளின் ஆட்சியில் மனுஸ்மிருதியால் ஏழைகள் தலித்கள் துயரப்படுகின்றனர்: கார்கே சாடல்

4 months ago 14

ல்புதுடெல்லி: ஒன்றியத்திலும், மாநிலங்களிலும் உள்ள பாஜ அரசுகள், மனுஸ்மிருதியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு எதிரான மனநிலையை கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்தார். தற்போது பாஜ ஆளும் மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அதே மனநிலை மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கிறது. கடந்த 2 நாட்களில் மத்தியபிரதேசத்தின் தேவாசில் தலித் இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் கொல்லப்பட்டுள்ளார். ஒடிசாவின் பாலசோரில் பழங்குடியின பெண் மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் பிவானியில், பிஏ தேர்வுக் கட்டணத்தை செலுத்த முடியாமல், தலித் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் பால்காரில், பழங்குடியின கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஐசியுவைத் தேடி 100 கிமீ பயணம் செய்து இறந்துள்ளார். உபியின் முசாபர்நகரில், 3 தலித் குடும்பங்கள் சாதி அடிப்படையிலான தாக்குதல்களால் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அரசியலமைப்புக்கு எதிரான மோடி ஆட்சியில் தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. மனுஸ்மிருதியின் தாக்கத்தால் ஏழைகள், தலித்கள் துயரப்படுகின்றனர். தலித்-பழங்குடியினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் 2014ம் ஆண்டிலிருந்து இரட்டிப்பாகி இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இவ்வாறு 140 கோடி இந்தியர்களின் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படுவதை காங்கிரஸ் அனுமதிக்காது. பாஜ-ஆர்எஸ்எஸ்சின் அரசியலமைப்புக்கு எதிரான சிந்தனையை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post பாஜ அரசுகளின் ஆட்சியில் மனுஸ்மிருதியால் ஏழைகள் தலித்கள் துயரப்படுகின்றனர்: கார்கே சாடல் appeared first on Dinakaran.

Read Entire Article