பாசனத்திற்காக ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு

5 hours ago 2

தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அதிமுக உறுப்பினர் காமராஜ், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குளாக தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டியது கட்டாயம் எனவும், நடப்பு ஆண்டில் கால்வாய்கள், வடிகால்கள் என 822 தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனவும் கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் வடிகால் மற்றும் ஆறுகளில் மணல் திட்டு ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்வதற்காக சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

98 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் இப்பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு டெல்டா மாவட்டத்திற்கு தனியாக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தூர்வாரும் பணிகளும் மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்' என்றார்.

Read Entire Article