பாசன வாய்க்காலில் இறங்கிய குழந்தை நீரில் மூழ்கி பலி

2 months ago 10
கரூர் மாவட்டம், மாயனூர் தண்ணீர் பாலம் அருகே தாயின் அஜாக்கிரதையினால் தென்கரை பாசன வாய்க்காலில் இறங்கிய குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது. வாய்க்கால் கரையோரம் வசிக்கும் கணபதி - சித்ரா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கிஷாந்த்க்கு இன்று காலை அவரது தாய் உணவளித்துவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து குழந்தை காணாததை அறிந்து தேடிய நிலையில், வாய்க்காலில் இறங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து தண்ணீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்திவிட்டு தேடியதில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தம்பதிக்கு பிறந்த ஒரு குழந்தை நாய் கடித்து உயிரிழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் 6 மாத கைக்குழந்தையாக கிஷாந்தை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளனர்.
Read Entire Article