
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அஜித்தின் கடைசி 5 படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை தற்போது காண்போம்.
'விடாமுயற்சி'
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான 'விடாமுயற்சி' திரைப்படம் 1997-ம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான 'பிரேக்டவுன்' திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் உலகளவில் ரூ. 135.65 கோடி வசூலித்தது.
'துணிவு'
எச் வினோத் இயக்கத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் துணிவு. இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றபோதிலும், இதியாவில் ரூ. 144.1 கோடி வசூலையும், வெளிநாடுகளில் ரூ. 55.9 கோடி வசூலையும் ஈட்டியது.
'வலிமை'
எச் வினோத் இயக்கிய ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் 'வலிமை' . இதில் அஜித்துடன் கார்த்திகேயா கும்மகொண்டா, ஹுமா குரேஷி மற்றும் குபானி ஜட்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியாவில் ரூ.123.5 கோடியும், உலகளவில் ரூ.41 கோடியும் வசூலித்தது.
'நேர்கொண்ட பார்வை'
எச். வினோத் இயக்கிய 'நேர்கொண்ட பார்வை' படம் பாலிவுட் படமான 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதில் அஜித்துடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் மற்றும் ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படமும் உலகளவில் ரூ.126.7 கோடி வசூலித்து பிளாக்பஸ்டராக அமைந்தது. இந்தியாவில் ரூ.101.7 கோடியும், சர்வதேச அளவில் ரூ.25 கோடியும் வசூலித்தது.
'விஸ்வாசம்'
இயக்குனர் சிவாவின் 'விஸ்வாசம்' படம் அஜித்தின் சினிமா கெரியரில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகும். இதில் அஜித்துடன் நயன்தாரா, விவேக் மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் உலகளவில் ரூ. 204.26 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்தது.