பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்தையடுத்து திருப்பதி, விஜயவாடா செல்லும் 18 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

3 months ago 16

சென்னை: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தையடுத்து திருப்பதி, விஜயவாடா, புதுச்சேரி வழித்தடத்தில் செல்லும் 18 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது. கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீகாரின் தர்பங்கா செல்லும் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை மார்க்கத்தில், ‘லுாப் லைனில்’ நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து அடைந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று 18 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி உள்பட இரண்டு மெயில்லைன் மார்க்கத்திலும் ரயில்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று இயக்கப்பட இருந்த 18 ரயில்களின் சேவைகளை ரத்து செய்தும், சில ரயில்களை மாற்றுப்பாதையில் திருப்பியும் விடப்பட்டது. குறிப்பாக திருப்பதி – புதுச்சேரி எம்இஎம்யு ரயில் (வண்டி எண்.16111) புதுச்சேரி – திருப்பதி எம்இஎம்யு ரயில் (வண்டி எண்.16112), சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16203), திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16204), சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16053), திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16054), சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16057), திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16058), அரக்கோணம் – புதுச்சேரி எம்இஎம்யு ரயில் (வண்டி எண்.16401), கடப்பா – அரக்கோணம் எம்இஎம்யு ரயில் (வண்டி எண்.16402), சென்னை சென்ட்ரல் – திருப்பதி எம்இஎம்யு ரயில் (வண்டி எண்.06727), திருப்பதி – சென்னை சென்ட்ரல் எம்இஎம்யு ரயில் (வண்டி எண்.06728) அரக்கோணம் – திருப்பதி எம்இஎம்யு ரயில் (வண்டி எண்.06753), திருப்பதி – அரக்கோண்டம் எம்இஎம்யு ரயில் (வண்டி எண்.06754), விஜயவாடா – சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12711), சென்னை சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12712), சூலூர்பேட்டை – நெல்லூர் எம்இஎம்யு ரயில் (வண்டி எண். 06745), நெல்லூர் – சூலூர்பேட்டை எம்இஎம்யு ரயில் (வண்டி எண். 06746) என 18 ரயில்களின் சேவைகளை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

* சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தையடுத்து 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூட்டம் அதிகளவில் இருந்தது. மேலும் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதி திருமலைக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். ரயில்கள் தொடர்ந்து தாமதமானதால் பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

The post பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்தையடுத்து திருப்பதி, விஜயவாடா செல்லும் 18 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article