பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தமிழக அரசு மீட்பு மற்றும் உதவிப்பணிகளில் தீவிரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

3 months ago 15

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை விபத்து நடந்த இடத்திற்கு செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தமிழக அரசு மீட்பு மற்றும் உதவிப்பணிகளில் தீவிரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article