பாக்சிங் டே டெஸ்ட்; 2 ஸ்பின்னர்களுடன் களம் இறங்கும் இந்தியா...? - வெளியான தகவல்

6 months ago 22

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஆடும் லெவனில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர் ஆடும் லெவனில் இடம் பெறுவதால் நிதிஷ் குமார் ரெட்டிக்கு நாளைய ஆட்டத்தில் இடம் கிடைக்காது என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், நாளைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுடன், ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்க உள்ளதாகவும். ராகுல் 3ம் இடத்தில் ஆட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சுப்மன் கில் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

Read Entire Article