பாக். விமான தளம், ஆயுத கிடங்குகளை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி: போர் நிபுணர் டாம் கூபர் கருத்து

4 hours ago 3

டெல்லி: ஆஸ்திரியாவை சேர்ந்த போர் நிபுணர் டாம் கூபர், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகளில் நடந்த போர் குறித்து பல ஆய்வு கட்டுரைகளை எழுதி பிரபலம் அடைந்தவர். தற்போது, இந்தியா – பாகிஸ்தான் போர் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த மோதலை மேற்கத்திய ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டன. அவைகள் போர் கள நிலவரத்தை அறியாமல் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தன.

பாகிஸ்தான் பகுதிக்குள் இந்தியா ஊடுருவி நடத்திய துல்லிய தாக்குதலில் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டது என்பது முக்கியம் அல்ல. ஆனால் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களையும், அணு ஆயுத கிடங்குகளையும் குறிவைத்து தாக்கியது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி. இதை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. இந்தியாவின் பிரம்மோஸ் மற்றும் ஸ்காலப் ஏவுகணைகளுக்கு நிகராக பாகிஸ்தானிடம் ஆயுதம் இல்லை.

தன்னிடம் ஏவுகணைகள் இருப்பதாக பாகிஸ்தான் பெருமையாக கூறி கொள்ளலாம். அதனால் இந்தியாவின் தாக்குதலை தடுக்க முடியவில்லை. நூர் கான் மற்றும் சர்கோதா போன்ற பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் மிகவும் மோசமாக சேதமடைந்தன. பாகிஸ்தானின் ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குனர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் குறித்து பேசியதன் மூலம் பாகிஸ்தான் போருக்கு தயாரில்லை என்பதை உணர்த்தியுள்ளார்.

The post பாக். விமான தளம், ஆயுத கிடங்குகளை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி: போர் நிபுணர் டாம் கூபர் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article