பாக்.கில் 37 பேர் பலி

1 month ago 5

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த கலவரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வியாழன்று பொதுமக்கள் சென்ற வாகனங்கள் மீது தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 47 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் அலிசாய் மற்றும் பாகன் பழங்குடியினருக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரும் கனரக மற்றும் தானியங்கி ஆயுதங்களால் ஒருவரையொருவர் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலிஷ்கேஷ், கர்கலி, குஞ்ச் அலிசாய் பகுதிகளில் துப்பாக்கி சூடு நடந்து வருகின்றது. இந்த சம்பவங்களில் இதுவரை 37பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறையில் வீடுகள், கடைகள் சேதமடைந்துள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

The post பாக்.கில் 37 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article