சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி ஜூலை 5ம் தேதி, அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு முழு திருவுருவச் சிலை வைக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இதையடுத்து, சிலை வைக்க அனுமதி அளிப்பதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் சிலை வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பொற்கொடி தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டது.
The post பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி!! appeared first on Dinakaran.