பாக்.கிற்கு விமானத்தில் சீனா ஆயுதங்கள் சப்ளை..? பொய்யான தகவல் என மறுப்பு

4 hours ago 2

பெய்ஜிங்: பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் ராணுவ விமானத்தை சீனா அனுப்பி வைத்ததாக வந்த தகவலை அந்நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடி தரும் நடவடிக்கையாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கியது. இந்நிலையில் சீனாவில் இருந்து ராணுவ சரக்கு விமானம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதில் ஆயுதங்கள் இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்ததாக வந்த செய்திக்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. சீன ராணுவமானது, சியான் ஒய்-20 ராணுவ விமானம் மூலமாக பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் எடுத்து சென்றதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.

இது தொடர்பாக சீன பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பதிவில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாகிஸ்தானுக்கு ஒய்-20 ராணுவ விமானத்தில் நிவாரண பொருட்கள் பாகிஸ்தானுக்கு எடுத்து சென்றதாக இணையத்தில் ஏராளமான தகவல்கள் பரவி வருகின்றது. அத்தகைய கூற்றுக்கள் உண்மைக்கு புறம்பானவை. இணையதளம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. ராணுவம் தொடர்பான வதந்திகளை உருவாக்கி பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் தவறான தகவல்களை பரப்பிய புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பான செய்திகளை வதந்தி என்ற சிவப்பு நிறத்தில் முத்திரையிடப்பட்ட பல்வேறு ஸ்கீரின் ஷாட்களையும் சீன ராணுவம் பதிவிட்டுள்ளது.

The post பாக்.கிற்கு விமானத்தில் சீனா ஆயுதங்கள் சப்ளை..? பொய்யான தகவல் என மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article