பாக்.கிற்கு எதிரான போரை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு

3 hours ago 2

புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் போரால் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த சூழலில் அவரது பாதுகாப்பை ஒன்றிய அரசு திடீரென அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை அடிப்படையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஜெய்சங்கரின் பாதுகாப்பு ஒய் வகை பிரிவில் இருந்து இரண்டாவது மிக உயர்ந்த இசட் வகை பிரிவாக மாற்றப்பட்டது. தற்போது கூடுதலாக அவரது பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் 2 கவச வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதை ஒன்றிய உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் முக்கிய விஐபிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

The post பாக்.கிற்கு எதிரான போரை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article