பாக். காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 3 அதிகாரிகள் பலி

3 hours ago 1

பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி உள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு போலீசாரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

The post பாக். காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 3 அதிகாரிகள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article