பாகுபலிக்கு பின்னர் தீபிகா படுகோனுடன் நடிக்க வாய்ப்பு: மறுத்த பிரபாஸ் - ஏன் தெரியுமா?

2 months ago 13

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் பிரபாஸ். இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஈஸ்வர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து 2004-ம் ஆண்டு வெளியான வர்ஷம் படம் இவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது.

பின்னர், சத்ரபதி, ரிபெல் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார். அதனையடுத்து, ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த படம் பாகுபலி. இப்படத்தின் மூலம் இவர் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் தீபிகா படுகோனுடன் நடிக்க பிரபாசுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது ஆனால், அதனை பிரபாஸ் மறுத்திருக்கிறார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 'பத்மாவத்'. இப்படத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் மற்றும் சாஹித் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் சாஹித் கபூர் நடித்த, ராஜபுத்திர மன்னரான மகாராவல் ரத்தன் சிங்கின் கதாபாத்திரம் முதலில் பிரபாசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், பிரபாஸ் அதை மறுத்திருக்கிறார். பிரபாஸ் அப்போது பாகுபலி 2 படப்பிடிப்பில் பிசியாக இருந்ததாகவும், பாகுபலி கதாபாத்திரத்தைப்போல இந்த பாத்திரம் தனித்து நிற்கும் பாத்திரமாக இல்லை என்பதற்காகவும் இப்படத்தில் நடிக்க பிரபாஸ் மறுத்ததாக கூறப்படுகிறது.

Read Entire Article