பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் கடைசி டெஸ்ட்: இன்று தொடக்கம்

2 weeks ago 5

முல்தான்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. அதேவேளை இந்த போட்டியில் வென்றால் தொடரை சமன் செய்து விடலாம் என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் போராட உள்ளது. இதனால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

Read Entire Article