பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் விடுவிப்பு

3 hours ago 2

புதுடெல்லி: பஹல்காமில் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் 23ம் தேதி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா, பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் எல்லையில் பணியில் இருந்தபோது தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எதிரொலியாக இருநாட்டுக்கும் இடையே மோதல் வெடித்தது. 4 நாட்களுக்கு பின் இருநாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.

இந்நிலையில் இரு நாட்டு ராணுவ உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டிருந்த வீரர் பூர்ணம் குமார் ஷா விடுவிக்கப்பட்டுள்ளார். 21 நாட்களுக்கு பின் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அவரை நேற்று காலை இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் கடந்த 3ம் தேதி ராஜஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைப்பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ரேஞ்சரும் நேற்று பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டார்.

The post பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் விடுவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article