பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் பலி; 62 பேர் படுகாயம்

2 months ago 8

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா ரயில் நிலையத்தில் நேற்று காலை வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட தயாரானது. இதனால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு இருந்தனர்.

இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் அங்கு நின்ற ஒருவர் மனித வெடிகுண்டாக வெடித்து சிதறினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு மற்றும் சட்ட அமலாக்க குழுவினர் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையை சேர்ந்த 14 பேர் உட்பட 27 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

மேலும், பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட படுகாயமடைந்த 62 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

The post பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் பலி; 62 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article