
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனிடையே இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்தபோது, அவருக்கு கிடைத்த பரிசுப்பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பான 'தோஷகானா' ஊழல் வழக்கில், கடந்த ஜனவரி 31-ந்தேதி இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து ஊழல் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி புஷ்ரா பீவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது, 10 லட்சம் ரூபாய் பிணைத்தொகை அடிப்படையில் புஷ்ரா பீவிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.