''பாகிஸ்தான் மீது போர் தேவை இல்லாதது'' - திருமாவளவன் வலியுறுத்தல்

5 hours ago 2

திருச்சி: "பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியபடுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று திருச்சி வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் அளித்த பேட்டி: ஜாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்தியர் என்ற உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பகை வளர்த்து, ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

Read Entire Article