சென்னை: இ-சேவை மற்றும் பிற துறைகளின் சேவைகளை வாட்ஸ்ஆப் செயலியில் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பேரவையில் இன்று (ஏப்.25) தகவல் தொழில்நுட்பவியல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது: “முன்பு 7,000 இ-சேவை மையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது தமிழகம் முழுவதும் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இ-சேவை மையங்கள் வாயிலாக கடந்த ஆண்டு ஏறத்தாழ ஒரு கோடியே 20 லட்சம் பொதுமக்கள் பயன்பெற்றனர். கிராமப்புறமாக இருந்தால் 2 கிலோ மீட்டருக்கு ஒரு இ-சேவை மையமும், நகர்ப்புறமாக இருப்பினர் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு இ-சேவை மையமும் இருக்க வேண்டும் என்பது அரசின் இலக்கு.