பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கேரி கிரிஸ்டன் விலகல்..?

2 months ago 13

கராச்சி,

பாகிஸ்தான் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இதையடுத்து பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் பதவி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர் பாகிஸ்தான் அணியிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் உள்கட்டமைப்பிலும் மாற்றங்களை செய்ய விரும்பினார்.

ஆனால், கேரி கிரிஸ்டன் எடுத்த முடிவுகள் பலவற்றுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Read Entire Article