பாகிஸ்தானுக்கு 'ஹாட்ரிக்' அபராதம் விதித்த ஐ.சி.சி. - ஏன் தெரியுமா..?

1 week ago 6

துபாய்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதில் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐ.சி.சி அபராதம் விதித்திருந்தது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் மெதுவாக பந்து வீசியது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு 'ஹாட்ரிக்' அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


Pakistan fined for maintaining slow over-rate in the third #NZvPAK ODI.

Details ⬇️https://t.co/XwEKTJZ142

— ICC (@ICC) April 7, 2025


Read Entire Article