பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் நியூசிலாந்து

15 hours ago 2

வெலிங்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 16-ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான புதிய கேப்டனாக மிக்கேல் பிரெஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் கைல் ஜேமிசன் மற்றும் வில்லியம் ஒரூர்க் ஆகியோர் முதல் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர். இவர்களுக்கு பதிலாக ஜாக் பவுல்க்ஸ் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் கடைசி 2 போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

மிக்கெல் பிரெஸ்வெல் (நியூசிலாந்து), பின் ஆலன், மார்க் சாப்மேன், ஜேக்கப் டபி, ஜாக் பவுல்க்ஸ், மிச் ஹே, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிச்சேல், ஜிம்மி நிஷம், வில்லியம் ஒரூர்க், டிம் ராபின்சன், பென் சீயர்ஸ், டிம் சீபெர்ட் மற்றும் இஷ் சோதி. 

Read Entire Article