பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; கேப்டன் இல்லாமல் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி

2 months ago 12

மெல்போர்ன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதன் பின்னர் டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலிய சீனியர் வீரர்கள் தயாராகும் பொருட்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதில் ஆச்சரியப்படும் விதமாக இந்த அணிக்கு கேப்டன் யார்? என்று அறிவிக்கப்படவில்லை. இந்த அணியில் டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய டி20 அணி விவரம்; சீன் அப்போட், சேவியர் பார்ட்லெட், கூப்பட் கன்னோலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ப்ரேசர் மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.


Introducing our Men's T20I squad to take on @TheRealPCB next month pic.twitter.com/5TdEF3EqMd

— Cricket Australia (@CricketAus) October 28, 2024

Read Entire Article