பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து

3 months ago 14

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும், 3வது டெஸ்ட் தொடர் வரும் 24ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதன் காரணமாக இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

இந்நிலையில், இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கஸ் அட்கின்சன் மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணி விவரம்; ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது, ஜேக் லீச், ஷோயப் பஷீர்.


Locked in: Our XI for the final Test pic.twitter.com/RNn82j4ZD4

— England Cricket (@englandcricket) October 22, 2024

Read Entire Article