
வெல்லிங்டன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது. இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான மார்க் சாம்ப்மென் நாளைய ஆட்டத்தில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலது தொடை தசைநார் காயம் காரணமாக அவர் நாளைய ஆட்டத்தில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக டிம் செய்பர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.