பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து கூறியதால் அசாம் எம்எல்ஏ தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

7 hours ago 2

கவுகாத்தி: பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து கூறிய அசாம் எம்எல்ஏ தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் அமினுல் இஸ்லாம். இவர் அண்மையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, பஹல்காம் தாக்குதலை ஒன்றிய அரசின் சதி என்றும், இந்த தாக்குதல் மதரீதியாக மக்களைப் பிரிக்கும் முயற்சி என்றும் குறிப்பிட்டார் இவரது இந்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகியது. இதனால் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனக் கருதி, அவர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டது.

தொடர்ந்து அவர், நாகோன் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 14ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானை ஆதரித்து பேசியதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நாகோன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசாமில் இதுவரை பாகிஸ்தானுக்கு ஆதரவு கருத்துகளை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து கூறியதால் அசாம் எம்எல்ஏ தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article