இ-சேவை மைய சர்வர் முடங்குவதால் பணிகள் பாதிப்பு: மாணவர் சேர்க்கை சான்று பெற முடியாமல் பெற்றோர் அவதி

2 hours ago 1

சென்னை: தமிழகம் முழுவதும் அரசின் சேவைகளைப் பெற அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் நிலையில், இ-சேவை மைய சர்வர் அவ்வபோது முடங்கி பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் மாணவர் சேர்க்கைக்கான சான்றை உரிய காலத்தில் பெற முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம், கூட்டுறவுத் துறை, எல்காட் என பல்வேறு துறைகளுக்கு அரசு இ-சேவை மையங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

Read Entire Article