பாகிஸ்தானில் வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 18 பேர் பலி

2 days ago 3

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இஸ்லாமாபாத்தின் பகவால்பூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ், பதே ஜங் என்ற பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். பெண்கள் உள்பட 22 பேர் படுகாயங்களுடன் பெனாசீர் பூட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஒருவர் மட்டும் இஸ்லாமாபாத்தில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என போக்குவரத்து காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிந்துவின் நவுஷாஹ்ரோ பெரோஸ் மாவட்டத்தில், மோரோ அருகே எம்-6 மோட்டார்வேயில் ஒரு லாரியும், வேனும் நேருக்குநேர் மோதியதில் எட்டு பேர் இறந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணங்கள் அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் செல்லுதல் மற்றும் போக்குவரத்து விதிகளை புறக்கணிப்பது போன்றவையாக உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Read Entire Article