சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25 (பசலி 1434) ஆம் ஆண்டிற்கு பாசனத்திற்காக பழைய ஆயக்கட்டு பகுதி 5 ஏரிகளை நிரப்பி, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு நாளை (03.01.2025) முதல் 22.05.2025 வரை 140 நாட்களுக்கு பாசனத்திற்கு என மொத்தம் 395.33 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம், உட்பட 13 கிராமங்களில் உள்ள சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து இதன் மூலம் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு மொத்தம் 4,500.00 ஏக்கர் நிலம் பயன்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.