'டிராகன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

2 days ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து 'லவ் டுடே' படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 'டிராகன்' படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கதாபாத்திர அறிமுக புகைப்படங்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிகுமார், ஜார்ஜ் மரியன், இந்துமதி, விஜே சித்து ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் பாடல்கள் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது. படத்தின் முதல் பாடலான 'ஓ பையரு பையருமா ' லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

லியோன் ஜேம்ஸ் இசையில் அனிருத் இந்த முதல் பாடலை பாடியுள்ளார். பாடல் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

First single ! Need your love and fire as the dragon rises! ❤️❤️https://t.co/AunWe2s9rn pic.twitter.com/b0q96VGFg9

— Ashwath Marimuthu (@Dir_Ashwath) January 2, 2025
Read Entire Article