பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் - 8 பேர் பலி

2 months ago 16

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள வாரிஸ்தான் மாவட்டத்தில் மிர் அலி டெசில் என்ற பகுதியில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை வாகனங்களை குறிவைத்து உடலில் வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 4 போலீசார், 2 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 2 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தானில், குறிப்பாக கைபர் பக்டுங்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article