பாகிஸ்தானில் தட்டம்மை பாதிப்புக்கு 17 குழந்தைகள் பலி

1 day ago 3

கராச்சி,

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை தட்டம்மை பாதிப்பு பற்றி சிந்த் சுகாதார துறை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளானது தெரிய வந்தது. இதில், அதிக அளவாக காயிர்பூர் மாவட்டத்தில் 10 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

கராச்சியில் கடந்த 2 மாதங்களில் மொத்தம் 550 குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கராச்சியின் கிழக்கு மாவட்டத்தில் 5 குழந்தைகள் பலியானார்கள். சுக்கூர் மற்றும் ஜகோபாபாத் மாவட்டங்களில் தலா ஒரு குழந்தை என பாகிஸ்தானில் 17 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி போடாமல் இருப்பது ஆகியவை குழந்தைகளின் மரணங்களுக்கான முக்கிய காரணங்கள் ஆகும் என கூறினர்.

Read Entire Article