ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஆஸ்கர் வெற்றி குறித்து பகிர்ந்த தீபிகா படுகோன்

3 days ago 3

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது , ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படங்கள் இருந்தபோதும், இந்தியா பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

"இந்தியா பலமுறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. அதேபோல் அதற்கு தகுதியான பல திரைப்படங்கள் நிராகரிக்கப்படுள்ளன.

ஆஸ்கர் விருது ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு அறிவிக்கப்பட்டபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு இந்தியன் என்பதை தவிர எனக்கும் அந்தத் திரைப்படத்திற்கும் உண்மையில் எந்தத் தொடர்பும் இல்லை, ஆனால் அது மிகப்பெரிய, மிகப்பெரிய தருணம்' என்றார்.

Read Entire Article