பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

10 hours ago 2

புதுடெல்லி,

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் காரணமாக நிலை குலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதன்படி பாகிஸ்தானில் இருந்து பதன்கோட் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் நோக்கி வந்த எப் 16 மற்றும் ஜேஎப். 17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை நடுவழியில் மறித்து இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதேபோல் மேலும் ஒரு விமானத்தையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது.

இதேபோல் ஜம்முவில் உள்ள சத்வாரி விமான நிலையம் மற்றும் சம்பா, ஆர்.எஸ்.புரா, ஆரண்யா விமான நிலையங்களை நோக்கி வந்த பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளையும் இந்திய ராணுவம் நடுவழியில் சுட்டு வீழ்த்தியது.

இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் வரத்தொடங்கியதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.

முன்னதாக பாகிஸ்தானின் ரேடார், வான் பாதுகாப்பு அமைப்புகள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலின் 'ஹார்பி' டிரோன்களை இந்தியா பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஹார்பி டிரோன், ரேடார் அமைப்புகளை தானாக கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது. இந்த டிரோன் 9 மணி நேரம் வரை இயங்கக்கூடியது என்பதால் இரவு, பகல் மற்றும் தொலைதூரம் என அனைத்து வகை தாக்குதலுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. 

பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானப்படையும், ராணுவமும் இடைமறித்து சுட்டு வீழ்த்திய நிலையில், இதனை பாகிஸ்தானின் ராணுவ படை தளபதிகளில் ஒருவரான அகமது ஷரிப் சவுத்திரி உறுதிப்படுத்தி உள்ளார்.  

Read Entire Article