டெல்லி : பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலைக்கு பதில் புதிய மாநில தலைவரை நியமிக்க பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. புதிய மாநில தலைவருக்கான போட்டியில் பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன் முந்துவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனை என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியை உறுதிசெய்யும் வகையிலேயே மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றம் எனத் தகவல் தெரியவந்துள்ளது.
The post பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல்..!! appeared first on Dinakaran.