தமிழ் மொழிக்கு பிரதமர் பெருமை சேர்க்கும் நிலையில் பா.ஜ.க. தமிழுக்கு எதிரானது போல் சித்தரிக்க தி.மு.க. முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பா.ஜ.க. அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாடிய ஆயுத பூஜை விழாவில் எல்.முருகன் கலந்து கொண்ட பின் அவர் பேட்டியளித்தார்.