பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

2 months ago 21
தாம்பரம் அடுத்த சித்தாலப்பாக்கம் அருகே பாஜக கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை வழி மறித்து மர்மகும்பல் ஒன்று அடித்து தாக்கி கடத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்  பெண்ணை காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி மற்றொரு காரில் கடத்திச்செல்லும் காட்சிகள் தான் இவை..! சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த லட்சுமி பிரியா என்பவர் தனது 19 வயது மகனுடன் பா.ஜ.க கொடி கட்டிய காரில் திருநீர் மலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்மகும்பல் அவரை தாக்கியது அவரது மகனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி லட்சுமி பிரியாவை காரில் இருந்து இறக்கிய நிலையில் அவரை மழை நீரால் சகதியான தரையில் கிடத்தி , பேண்ட் பாக்கெட்டில் இருந்த கார் சாவியை எடுத்துக் கொண்ட கும்பல் அவரை மற்றொரு காரில் ஏற்றி கடத்திச்சென்றது. இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் கடத்தல் கும்பலை பிடித்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு பள்ளிக்கரனை காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணை கடத்தியது அவரது 2 வது கணவரான ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் தலைமையிலான கும்பல் என்பது தெரியவந்தது. தன்னை சிவக்குமாரின் 2 வது மனைவி எனக்கூறிக் கொண்ட லட்சுமி பிரியா அப்போது நடவடிக்கை வேண்டாம் என்று எழுதி கொடுத்து சென்று விட்டு காலையில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவக்குமார் தன்னை ஏமாற்றி 2 வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறியதோடு, தன்னிடம் உள்ள சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்ள கடத்தியதாக புகார் அளித்தார்
Read Entire Article