பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி - மராட்டிய அரசு

4 hours ago 2

மும்பை,

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தநிலையில் அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்யமுடியாத அளவுக்கு தண்டனை பெற்றுத்தருவோம் என்று பிரதமர் மோடி ஆவேசத்துடன் கூறி இருந்தார்.

இந்தநிலையில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விக்கு மாநில அரசு உதவும் என மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பான மராட்டிய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இதனை அறிவித்துள்ளார்.

Read Entire Article