பஹல்காம் தாக்குதல் 140 கோடி இந்தியர்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம்: கே.கிருஷ்ணசாமி

2 weeks ago 9

சென்னை: பஹல்காம் தாக்குதல் 140 கோடி இந்திய மக்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஏறக்குறைய 26 பேர் உயிரிழந்து இன்றோடு ஐந்து தினங்கள் ஆகிவிட்டன. இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருத இயலாது. 140 கோடி இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட யுத்தமாகத் தான் கருத வேண்டும். அதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

Read Entire Article