பெர்லின்: பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஜெர்மனியின் பெர்லினில் இந்திய வம்சாவளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளிகள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அ்ந்த வகையில் ெ்ஜர்மனியின் தலைநகர் பெர்லினின் பிரபலமான பிராண்டன்பர்க் கேட், பெர்லின் டோம், மற்றும் ஹம்போல்ட் மன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாகப் பேரணியாகச் சென்று, இந்திய வம்சாவளியை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்கள், பாகிஸ்தானின் ஆதரவுடன் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை கண்டிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் கூறினர். மேலும், ‘இஸ்லாமிய குடியரசு நாடான பாகிஸ்தானை தீவிரவாத அரசாக அறிவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர். இந்தப் பேரணி, பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் நடத்தப்பட்டது.
ஏற்கனவே லண்டனில் கடந்த ஏப்ரல் 27, 28ம் தேதியிலும், பிரான்சின் பாரிஸ், போலந்தின் வார்சா, ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
The post பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஜெர்மனியில் இந்திய வம்சாவளிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.