பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய மந்திரி எல்.முருகன்

4 hours ago 2

திருவனந்தபுரம்,

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளியை சேர்ந்த ராமசந்திரன் என்பவரும் உயிரிழந்தார். ராமசந்திரன் தனது மகள் ஆர்த்தி உள்பட குடும்பத்துடன் காஷ்மீர் சென்றிருந்த நிலையில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ராமசந்திரனின் வீட்டிற்கு மத்திய மந்திரி எல்.முருகன் இன்று நேரில் சென்றார். அவர் ராமசந்திரனின் மகள் ஆர்த்தி உள்பட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மதியம் 1 மணிகு ராமசந்திரன் வீட்டிற்கு சென்ற எல்.முருகன் சுமார் 30 நிமிடம் குடும்பத்தினருடன் பேசினார். 

Read Entire Article