கோவை, பிப். 23: கோவை வடமதுரை குருடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி (60). இவர், சிவானந்தா காலனில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு செல்வதற்காக கவுண்டம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் சென்றார்.
மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கிய அவர் தனது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து சாவித்திரி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
The post பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.