பஸ்கள் மோதி 10 பேர் காயம்

5 months ago 18

 

ராமநாதபுரம், டிச.13:ராமநாதபுரத்தில் நேற்று காலை நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது கீழக்கரை டவுன் பஸ் ஒன்று ராமநாதபுரம் புது பஸ் நிலையத்தில் இருந்து அரண்மனை நோக்கி சென்றது. யூனியன் அலுவலகம் அருகே செல்லும் போது பஸ் டிப்போவில் இருந்து வந்த புதுமடம் செல்லக்கூடிய மற்றொரு அரசு டவுன் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்ஸில் இருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்தில் இரண்டு பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்து சேதமானது. செண்டர் மீடியனில் மோதியதால் பக்கவாடும் சேதமானது. இது குறித்து பி1 போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பஸ்கள் மோதி 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article