பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிகள் புகை பிடித்த அதிர்ச்சி காட்சி

3 months ago 18

கடலூர்,

சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இது பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பள்ளிகளில் நல்ல பண்புகளையும் பழக்க வழக்கங்களையும், சிறந்த கல்வியையும் கற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து இருந்த வேலையில், கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவிகள் இருவர் பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் பஸ் நிலையத்தில் புகைபிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பள்ளிக்கல்வித்துறை மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். பஸ் நிலையத்தில் பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் புகைபிடிக்கும் காட்சி மனதை பதைபதைக்க வைத்துள்ளது.


Read Entire Article