பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

3 months ago 22

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மாணவர்களை அழைத்து கல்வித்திறனை சோதித்து பார்த்தார். அமைச்சர் கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளித்தனர்.

அதனை தொடர்ந்து தமிழ் எழுத்தாளரும், பதிப்பாசிரியருமான பவா செல்லத்துரையை அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"பவாவின் வீடு. நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம். பவா சொல்லும் கதைகளை "பெருங்கதையாடல்" நிகழ்ச்சிகளின் வாயிலாக கேட்டுக்கொண்டே நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வோம். நேற்று அவர் சொல்லும் கதைகளை நேரடியாக கேட்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி பவா" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article